ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று இந்தியன் படத்தில் குற்றப்புலனாய்வு அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இயக்குநர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் மாதம் இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கான தேர்வும் தற்போது இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.