குழந்தைகள் அதிக நேரம் உறங்குவதற்கான காரணம் ! – Tamil VBC

குழந்தைகள் அதிக நேரம் உறங்குவதற்கான காரணம் !

குழந்தைகள் தாயின் கருவில் வளரும் பொழுதே அதிக நேரம் உறங்கும் பழக்கம் கொண்டு இருப்பார்கள். குழந்தைகள் பிறந்த பின்னரும் கூட மற்ற செயல்பாடுகளை விட உறங்குவது தான் அதிகமாக இருக்கும். குழந்தைகள் பிறந்த பின்பு எதற்காக அதிக நேரம் உறங்குகின்றனர்? ஏன் பிறந்ததன் பின்பு உறங்குகின்றனர் என்பது பெரும்பாலானவர்களின் சந்தேகமாக உள்ளது. அதற்கான காரணம் என்ன என்று காணலாம்.

குழந்தைகள் தாயின் கருவறையில் பத்து மாதங்களும் ஒரு முழுமையான மனித உருவத்தை பெற படிப்படியாக வளர்ச்சி பெறுகின்றனர். அந்த காலகட்டத்தில் குழந்தைகள் அதிக நேர உறக்கமும், மற்ற நேரங்களில் மனிதனுக்கான சாதாரண செயல்பாடுகளான அழுகை, கொட்டாவி, சிரித்தல் போன்றவற்றை புரிகின்றனர்.

ஏன் உறக்கம் அவசியம்?
குழந்தைகள் ஏன் அதிக நேரம் உறக்கம் மட்டும் என்று பார்த்தால், முழுமையான வளர்ச்சியை சரியாக அடைய உறக்கம் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது குழந்தையின் உடல் சரியான வளர்ச்சியை எட்ட உறக்கம் என்பது அவசியமான ஒன்று என்று கூறப்படுகிறது.

முழுமையான வளர்ச்சியை கருவறையில் அடைந்த பின்னும் ஏன் பிறந்ததன் பின்பு உறங்குகின்றனர் என்பது பெரும்பாலானவர்களின் சந்தேகமாக உள்ளது.

உடல் உறுப்புகள்..!
குழந்தைகள் கருவில் இருக்கும் போது அனைத்து உடல் உறுப்புகளும் உருவாகி மட்டும் இருக்கும். உருவான உடல் உறுப்புகள் இயங்க தேவையான சத்துக்கள் அந்த உறுப்புகளில் இருக்குமா என்றால் அதற்கான விடை சந்தகமே..!குழந்தைகளின் உடல் உறுப்புகள் இயக்கத்திற்கான சக்தியை பெற சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவசியமான ஒன்று. இந்த உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் உடலில் சேர்ந்து அவர்களை பலப்படுத்தும் செயல் முறை நடைபெற உறக்கம் மிகவும் கண்டிப்பாக அவசியம்

.

மூளை வளர்ச்சி..!
குழந்தைகளின் வெளிப்புற உடல் உறுப்புகளை போலவே, உட்புற உறுப்புகள் மற்றும் மூளை நரம்புகள், செல்கள் மற்றும் அவ்வுறுப்புகளின் இயக்கம் போன்றவை சீராக செயல்பட சரியான வளர்ச்சி அவசியம். மூளை போன்ற உள்ளுறுப்புகளுக்கு சக்தியை வழங்க, குழந்தைக்கு உணவு வாயிலாக அளிக்கப்படும் சத்துக்கள் அவசியம்.

குழந்தைகளுக்கு உணவு அவசியமாக இருந்தாலும், உடல் ஓய்வு நிலையில் இருந்தால் மட்டுமே உடல் உறுப்புகள் மற்றும் உள்ளுறுப்புகளால், சீரான வளர்ச்சியை பெற முடியும். எனவே குழந்தைகளுக்கு நீண்ட நேரம் உறக்கம் என்பது அவசியமான ஒன்று.

நரம்பு மண்டல வளர்ச்சி..!
குழந்தைகளின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட தகவல்களை கடத்தி அடித்தளமாக அமைவது நரம்பு மண்டலம் தான். குழந்தைகளின் நரம்பு மண்டலம் சிறப்பான வளர்ச்சியை பெற குழந்தைகள் போதுமான அளவு உறங்க வேண்டும். குழந்தைகளின் உடலும் மனமும் கொள்ளும் போதுமான அளவு, தேவையான அளவு உறக்கம் மட்டுமே அவர்களின் உடலின் நரம்பு மண்டலத்தை முழுமையான வளர்ச்சியடைய உதவும்.

தொந்தரவு கூடாது..!
குழந்தைகள் உறங்கும் இடம் மிகவும் அமைதியானதாக, தொந்தரவு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் பயம் கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த பய உணர்வு அவர்களின் வளர்ச்சியினை பாதிக்க அதிக வாய்ப்பு உண்டு. மேலும் குழந்தைகளின் கற்றுக் கொள்ளும் நிலையில் இந்த தொந்தரவுகளால் இடையூறு ஏற்பட்டு குழந்தை குழம்பி விடலாம்.! எனவே, குழந்தைகள் உறங்கும் பொழுது அமைதியான, எந்த வித ஒளி, இரைச்சல் என்ற எவ்வித தொல்லையும் இல்லாத சூழலை அமைத்துக் கொடுத்தல் அவசியம்.

உறக்கமும் மாதமும்..!
குழந்தைகள் பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரை அவர்கள் ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணி நேரம் வரை கட்டாயம் உறங்குதல் வேண்டும். குழந்தைகள் இத்தனை மணி நேரம் கட்டாயம் உறங்குவது அவர்களின் சிறப்பான வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும். குழந்தைகள் 4 முதல் 12 மாதம் வரையிலான கால கட்டத்தை அடையும் பொழுது, அவர்கள் 12 முதல் 16 மணி நேரம் வரையிலான காலம் உறக்கத்தை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!

குழந்தைகள் 12 முதல் 35 மாத காலகட்ட வளர்ச்சியை அடையும் பொழுது 11 முதல் 14 மணி நேரம் வரையில் கண்டிப்பாக உறங்க வேண்டும். குழந்தைகள் அந்தந்த வயதிற்கு ஏற்ப சரியான அளவு உறக்கத்தை மேற்கொள்ள பெற்றோர்கள் வழிவகை செய்ய வேண்டியது அவசியம்! எனவே குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியானது அவர்களின் பெற்றோர்களின் கையில் தான் உள்ளது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *