2019 தமிழ் வருடப் பிறப்பு பலன்கள்: மேஷ ராசி நேயர்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் …… – Tamil VBC

2019 தமிழ் வருடப் பிறப்பு பலன்கள்: மேஷ ராசி நேயர்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் ……

அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை) 14.4.2019 முதல் 13.4.2020 வரை

மேஷ ராசி நேயர்களே,
தமிழ் புத்தாண்டு பிறக்கும் பொழுதே குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கின்றார். உங்கள் ராசியிலேயே பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் இருக்கின்றார். எனவே இந்த ஆண்டு உங்களுக்கு இனிய ஆண்டாக அமையப் போகின்றது. மேலும் சுக ஸ்தானத்தில் சந்திரன் சொந்த வீட்டில் சஞ்சரித்து சகடயோக அமைப்போடு கிரகங்கள் சாதக நிலையில் இருக்கின்றன.

வருடத் தொடக்கத்தில் 9-ம் இடத்தில் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். அவர் பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களையே வழங்குவார்.

செல்வ வளம் சிறப்பாக இருக்கும். சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னேற்றம் கூடுதலாக இருக்கலாம். ஆயில்யம் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் ஆண்டின் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். மேலும் 12-ம் இடத்தில் மறைந்தும் இருக்கின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்.

6-க்குஅதிபதி நீச்சம் பெற்று 12-ல் இருப்பதால் விபரீத ராஜயோக அடிப் படையில் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் தனலாபங்களும் இடையிடையே வந்து சேரும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களைத்தேடி வருவர்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)

இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. ஜென்ம ராசியில் குரு பார்வை பதியும் பொழுது நன்மைகள் ஏராளமாக நடைபெறும். வாழ்க்கைப் பாதையில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். நண்பர்களும், உறவினர்களும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.

ads

Recommended For You

About the Author: jana

0 Comments

  1. Commander Du Viagra Sur Internet Allergic Reaction To Amoxicillin cialis 20mg for sale Order Prednisone From Canada Ciprofloxacine Diarrhee Compra Kamagra Contrareembolso

  2. Painkillers Online Predisone Pills For Sale From Canada Viagra En Cordoba [url=http://cialibuy.com]generic 5mg cialis best price[/url] Achat Viagra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *